250. மதியம் மண் குணம் அஞ்சு (திருப்புகழ்) - madhiyam man gunam anju (Thirupugazh)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • 250. மதியம் மண் குணம் அஞ்சு (திருப்புகழ்) - madhiyam man gunam anju (Thirupugazh)
    511 - சிதம்பரம்
    மதியம் மண் குணம் அஞ்சு
    நால் முக நகர முன்கலை கங்கை
    நால் குண மகரம் முன் சிகர
    அங்கி மூணிடை தங்கு கோண (2)
    மதனம் முன் தரி சண்ட மாருதம்
    இரு குணம் பெறில் அஞ்சு
    எல் ஓர் தெரு வகரம்
    மிஞ்சி அகன் படா கம்
    ஒர் ஒன்று சேரும் (2)
    கதிர் அடங்கிய அண்ட கோளகை
    யகர நின்றிடும் ரண்டு கால் மிசை
    ககனமின் சுழி ரண்டு கால்
    பரி கந்து பாயும் (2)
    கருணை இந்திரியங்கள் சோதிய
    அருண சந்திர மண்டலீகரர்
    கதி கொள் யந்திர விந்து
    நாதமொடு என்று சேர்வேன் (2)
    அதிர பம்பைகள் டங்கு டாடிக
    முதிர அண்டமொடு ஐந்து
    பேரிகை டகுட டண்டட
    தொந்ததோதக என்று தாளம் (2)
    அதிக விஞ்சையர் தும்ப்ரு
    நார்தரொடு இத விதம் பெறு
    சிந்து பாடிட அமரர் துந்துமி
    சங்கு தாரைகள் பொங்க ஊடு (2)
    உதிர மண்டலம் எங்குமாய் ஒளி
    எழ குமண்டி எழுந்து சூரரை
    உயர் நரம்பொடு எலும்பு மா
    முடி சிந்தி வீழ (2)
    உறு சினம் கொண்டு எதிர்த்த
    சேவக மழை புகுந்து உயர் அண்டம்
    வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்
    மகிழ் தம்பிரானே (2)
    கருணை இந்திரியங்கள் சோதிய
    அருண சந்திர மண்டலீகரர்
    கதி கொள் யந்திர விந்து
    நாதமொடு என்று சேர்வேன்
    கதி கொள் யந்திர விந்து
    நாதமொடு என்று சேர்வேன்
    உரகனும் புலி கண்ட ஊர்
    மகிழ் தம்பிரானே

Комментарии •